இஞ்சி விலையில் திடீர் ஏற்றம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 1100  ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட வந்த ஒரு கிலோ இஞ்சியின் விலை  2400 ரூபாவாக திடீரென அதிகரித்துள்ளது.

இஞ்சியின் விளைச்சல் குறைவு காரணமாக இஞ்சியின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக  மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.