இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாமும் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாமும் சனிக்கிழமை(19.09.2023) யாழ்.இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இணுவிலைச் சேர்ந்த காலமான கி.சிந்துஜன், ச.யதுசன், யோ.சதீஸ், செ.ரிஷாந் ஆகிய இளைஞர்களின் நினைவாகவே இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இரத்ததான முகாம் நிகழ்வில் 42 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.
இதேவேளை, தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாம் நிகழ்வில் 20 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.