இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கைக்கான நிதி மானியத்தை வழங்கியுள்ளார்.