இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விற்கப் பார்க்கிறார்களா?

இலங்கைக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஜனாதிபதி கூறிய கதையை பத்திரிகைகளில் பார்க்கும்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்

முன்பெல்லாம் வெவ்வேறு முதலீட்டாளர்கள் எங்களிடம் வந்து மூதலீடு குறித்து பேசி செயற்படுவர், இப்போது அப்படி இல்லை, இந்தியாவுக்குச் சென்று விற்றுவிட்டதை நாம் அறியோம்.

அதானியிடம் என்ன பேசினார்கள் என்றும் இந்தியா சென்ற போது என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.அதானிக்கு என்ன விற்றார்கள் என்றும் தெரியவில்லை. இவற்றுக்கு மத்தியில் சீன ஆராய்ச்சி கப்பல் விவகாரத்தால் இந்தியா மீண்டும் குழப்பமடைந்துள்ளது.

இன்னொரு பக்கம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னொரு பக்கம் இலங்கைப் பிள்ளைகள் சீன ஹிந்தி என்று கற்க வேண்டும் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதல் பாடசாலை கல்வியை கற்பதற்குரிய ஏற்பாடுகளை முறையாக வழங்க வேண்டும்.

பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம் எகிறியிருப்பதாலும், தரம் குறைந்த மருந்தாலும், மருந்தின் விலையும் மிக அதிகமாக உயர்ந்ததாலும் மருத்துவமனைகளுக்குச் சென்று சாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் பெற்றோர்கள் தவிக்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது இன்று நாட்டின் பிள்ளைகள் சீன ஹிந்தி மொழிகளை கற்கச் சொல்கிறார்கள்.எனக்குத் தெரியாது.இதற்கு என்ன சொல்வது?

13 ஆவது திருத்தம் குறித்து பொய்க் கதையை கட்டமைத்ததால் ஜனாதிபதிக்கு அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தும் இல்லாமல் போகும் நிலையே காணப்படுகிறது. சாகர காரியவசத்தின் பேச்சுக்கள் அதை உணர்த்துகின்றன.

தமிழ் வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் என்னிடம் இருப்பதாகக் காட்டிக் கொண்டு 13 ஆவது திருத்தம் குறித்து பேசி வேட்பாளர் பதவியை கோர முயல்வதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் கதை பொய்யானது.அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஏனென்றால் ஜனாதிபதி சொன்னபோது, ​தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான பதிலைப் வழங்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன் மாகாண சபை நடத்துங்கள் என்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியது. இப்போது அஸ்வெசும தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது” என்றார்.