இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

நாயாறு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய டோலர் மீன்பிடி படகில் இருந்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு கடல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் திருகோணமலை கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நாயாற்று கடல்பகுதியில் டோலர் மீன்பிடி படகு ஒன்று நிற்பதனை அவதானித்துள்ளனர்.

பின்னர் குறித்த நபர்களிடம் விசாரணை செய்தபோது இந்தியாவில் இருந்து மீன்பிடிக்கு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.