காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார்.
அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். இவர் நீர்கொழும்பு, நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்தார்.
மரணம் குறித்து தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. அவ்வப்போது காய்ச்சல் குறைந்து கொண்டே வந்தது. பின்னர் சனிக்கிழமை (05) இரவு எனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவு 10.30 மணியளவில் எமது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம். அங்கு மகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். என் மகன் இரவு உணவைக் கூட எடுத்துக் கொண்டான். ஆனால் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனது மகன் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.