இரசாயனம் கலந்த 82,000 கிலோ கொத்தமல்லி

கல்முனையில் இரசாயனம் கலந்த ஒரு தொகை கொத்தமல்லியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய திருக்கோயில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

தரமற்ற கொத்தமல்லிக்கு இரசாயனம் கலந்து விற்பனை செய்வதற்காக பொதி செய்து வைக்கப்பட்டிருந்த 82,000 கிலோகிராம் கொத்தமல்லியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், பொதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள், இயந்திரம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை கல்முனை நீதிமன்றில் இன்று(10) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.