இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டுக்கான சிறுபோக செய்கையின் அறுவடைகள் ஆரம்பம்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படுகின்ற இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கான  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குறித்த குளத்தின் கீழான சிறுபோக செய்கை கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

 

தற்போது சிறுபோக அறுடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பன்னங்கண்டி சின்னக்காடு மகிழங்காடு உள்ளிட்ட  இடங்களில் சிபோக அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் அரச நெற்களஞ்சியம்  என்பவற்றினூடாக அறுவடைசெய்யும் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்மைய நாட்களாக இரவு பகலாக கட்டாக்காலி கால்நடைகளால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.