இருதரப்பு , பல்தரப்பு ஒப்பந்தங்களை வலுவாக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை

தேசிய அபிவிருத்திக்காக அவசியமெனத் தீர்மானிக்கப்படுகின்ற இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னர், ஏற்புடைய தரப்பினர்களின் உடன்பாடுகளின்றி குறித்த உடன்படிக்கைகளிலிருந்து விடுபடுவதற்கு இயலாத வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக சட்டங்கள் வகுக்கப்படல் வேண்டுமென 2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை வரைபுக்கமைய சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.