மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பினை அடுத்து ஒருவர் கல்லால் தாக்குதலுக்குள்ளானார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று பிணையில் விடுவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் வாகன சாரதிக்கும் இன்னொரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு ஏற்பட்டவாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வாகன சாரதி சக பொலிஸார் மீது கல்லால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து தாக்கிய பொலிஸ் சாரதியை கைது செய்து, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் பிணையில்விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவரை உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.