இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகள்!

“இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார்” என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்தார்.

இது குறித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அதில், நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாச புத்தசாசன மற்றம் கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார்.

கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா கொக்கரித்து வருகிறார். இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்போம் என்கிறார்.

இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகளை, புத்த சமயத்தை, புத்தரின் கொள்கைகளை சரத் வீரசேகரா நஞ்சாக விதைக்கிறார். இறுதியில் அவர் படு தோல்வியையே காண்பார் என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்தார்.