இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கிறது!

இந்திய அரசாங்கம் வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதித்ததன் காரணமாகவே இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை 200 முதல் 220 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வரியை டிசம்பர் 31ஆம் திகதி வரை விதிப்பதற்கு இந்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.