இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எதிராக ஒரு சிறிய குழுவினர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நிதி முறைகேடுகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.