இளைஞர் மீது நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர்  காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இளைஞர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் பிட்டபன பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் துங்கல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.