உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத்திற்கெனப் புதிதாக அமைக்கப்பட்ட சப்பர வெள்ளோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை(13.08.2023) பிற்பகல் சிறப்பாக இடம்பெற்றது.
விசேட கிரியை வழிபாடுகளைத் தொடர்ந்து சப்பர வெள்ளோட்டம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மேற்படி ஆலய பரிபாலனசபைத் தலைவர் சு.கிருஷ்ணலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலயப் பிரதம குருவான சிவசிறீ குமாரசிவ சேவற்கொடியோன் குருக்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். இதன்போது சப்பரத்தைக் கலைநயங்களுடன் கூடியதாக அழகுற வடிவமைத்த இமையாணன் இந்திரன் சிற்பாலய ஸ்தபதி மகேந்திரன் குழுவினர் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.
தற்போது புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வரும் உடுப்பிட்டி தெற்கைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை சூரியகுமார் குடும்பத்தினரின் பல லட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் குறித்த சப்பரம் உருவாக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.