உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் தேர், தீர்த்தத் திருவிழா

யாழ். உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயத் தேர்த் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமையும்(14.08.2023), தீர்த்தத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமையும்(15.08.2023) சிறப்பாக நடைபெற்றது.

காலை-10 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளி நண்பகல்-12 மணியளவில் தேரில் ஆரோகணம் செய்தார்.

தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷங்களுடன் தேர்ப் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து தேரின் வடம் தொட்டிழுத்தனர். .

இதேவேளை, மேற்படி ஆலயத் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை விரத தினமான இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்-12.30 மணியளவில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக் கேணியில் சிறப்பாக இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.