கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை தோற்ற இருக்கும் மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் 2023 வருடத்துக்கு மாத்திரம் 40வீதமாக மாற்றி இருக்கிறோம். இது தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தருக்கிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சிக்கை தோற்ற இருக்கும் பாடசாலை மாணவர்களிடமிரு்ந்து விண்ணப்பம் கோரி இருக்கிறோம். 2023,07,17ஆம் திகதிய கடித்துக்கு அமைய, பாடசாலையில் இருந்து உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க 80வீத வருகை இருந்திருக்க வேண்டும். இதற்கு முன்னரும் இந்த எண்ணிக்கையே இருந்துவந்தது.
என்றாலும் 2020, 2021 வருடங்களில் ஏற்பட்ட கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையான நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு உரிய வகையில் பாடசாலைக்கு செல்ல முடியாமல போனது.
அதனால் நாங்கள் மீண்டும் கடிதம் ஒன்றை மாகாண கல்விச் செயலாளர்கள் மாகாண கல்வி பணிப்பாளர்கள், லவய பணிப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர் மற்றும் அதிபர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களை பாடசாலை மட்டத்தில் தீர்மானிக்க வேண்டும் எனவும்,
அடுத்ததாக பாடசாலை வருகை வீதம் தொடர்பான பிரச்சினை அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு பாடசாலை விண்ணப்பதாரியாக தோற்றுவதற்கு இருக்கும் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்க வேண்டாம் எனவும் அத்துடன் மாணவர்களின் பாடசாலைக்கு வருகை 80 வீதம் என்ற குறைந்த அளவு இந்த வருடத்துக்கு மாத்திரம் 40வீதமாக குறைத்திருக்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.
அதேநேரம் குறித்த பாடசாலையில் இருந்து விலகிய மாணவர்கள், மீண்டும் அந்த பாடசாலையில் இடம்பெற இருக்கும் உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க கோரினால் அதற்காக அந்த மாணவர்களின் சேர்வு இலக்கத்திலேயே மீண்டும் பதிவுசெய்து அவர்களை பாடசாலை விண்ணப்பதாரியாக கருதப்பட வேண்டும்.
அத்துடன் உயர்தர பரீட்சைக்கு இரண்டாவது தடவை அல்லது அதற்கு மேற்பட்ட தடவை தோற்ற எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்களை தவிர ஏனைய மாணவர்களுக்கு பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த பின்னர் பரீட்சைக்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.