உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருதில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது.

Familes relief, sadaqa bulletin நிறுவனங்களின் அனுசரணையில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.