உள்ளக கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற அங்கீகாரம் பொருளாதார மீட்சிக்கு சாதகமானது

உள்ளக கடன் மறுசீரமைப்புக்கு பாராளுமன்ற அங்கீகாரமானது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சாதகமானதென உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் பாரிஸ் ஹடட் செர்வோஸ் தெரிவித்தார்.

ஹில்டன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (18) பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடக மைய‌ம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை மையப்படுத்திய அனைத்து மறுசீரமைப்புகளும் அத்தியாவசியமானவை எனவும் உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது அரசியல் பேசும் நேரமில்லையெனவும் மக்களிடம் உண்மையான விடயத்தை எடுத்துக் கூறுமாறும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், மத்திய வங்கியின் சுயாதீன தன்மை அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.