ஊசி ஏற்றிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் செவ்வாய்க்கிழமை (18) இரவு விடுதிக்கு வந்துள்ளார்.

எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும்,அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.