எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் !

எரிபொருள் விலைகளில் இன்று 31 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தன்படி எரிபொருள் விலை மாற்றத்தை தாமும் பின்பற்றுவதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

 

புதிய விலைகள் பின்வருமாறு:

92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 348 ரூபாய்.

95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 375 ரூபாய்.

ஓட்டோ டீசல் ஒரு லீற்றருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் ஒரு லீற்றருக்கு 12 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 258 ரூபாவாகும்

மண்ணெண்ணெய் லீற்றருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 226 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.