ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய ஆயத்தம்

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு மற்றும் அதன் தலைவர் பதவியை மீளாய்வு செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வில் இந்த கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.