ஐ சேனல் விற்கப்பட்டதா?

அரசுக்குச் சொந்தமான அலைவரிசையான ஐ (Eye Channel), ஜூன் 30 இலிருந்து ஆறுமாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் ,மாதந்தோறும் ரூ. 250 மில்லியனுக்கு வி.ஐ.எஸ் ஒளிபரப்பு தனியார் நிறுவனத்திற்கு ரகசியமாக விற்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி கட்சியானது நேற்று குற்றஞ்சாட்டியுள்ளது.

சனல் ஐயின் ஒளிபரப்பு நேரமானது எந்தவித வெளிப்படைத்தன்மையுமின்றி விற்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை வெகுசன ஊடக அமைச்சர் நேற்று சமர்ப்பித்துள்ளதையடுத்து, ரூபவாஹினி ஊழியர்கள் மற்றும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் அறிந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.