நிதி அமைச்சு உட்பட அரச நிதி கணக்குகளை கண்காணிக்கும் உடனடி தகவல்களை பெற்றுக்கொள்ளவும் ஒருங்கிணைந்த திறைசேரி மேலான்மை தகவல் கட்டமைப்பு (இட்மிஸ் – ITMIS ) திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சம்மந்தப்பட்ட அரச துறைகளுக்கு ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க அலோசணை வழங்கியுள்ளார்.
ஒருங்கிணைந்த திறைசேரி மேலான்மை தகவல் கட்டமைப்பை செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் உள்ள அரச நிதி கணக்குகளை கண்காணிக்கவும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் முடியும். ஏற்கனவே ஜனாதிபதி செயலம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் நிதி செயல்பாடுகளை கணினிமயப்படுத்தும் நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை கூடிய விரைவில் ஆரம்பிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் ஒருங்கிணைந்த திறைசேரி மேலான்மை தகவல் கட்டமைப்புக்கான ‘இட்மிஸ் மென்பொருள்’ திட்டத்தை செயல்படுத்தவும் அடுத்த இரு மாதத்திற்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டம் தயாரிப்பின் போது தேவையான தகவல்களை மிக எளிதாக ‘இட்மிஸ் மென்பொருள்’ மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலும் வருமான வரி நடவடிக்கைகளை மையப்படுத்தி ரெமிஸ் (Ramis) என்ற மற்றுமொரு மென்பொருள் 2011ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2013ஆம் நடைமுறைக்கு வரவிருந்த இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதனால் அரச நிறுவனங்களின் நிதி செயல்பாடுகள் குறித்த தகவல் உரிய வகையில் கணினிமயப்படுத்த முடியாமல் போனது.
எவ்வாறாயினும் தற்போது குறித்த இரு திட்டங்களையும் செப்டெம்பர் இறுதிக்குள் நிறைவுப்படுத்தவும், இரு மாத்திற்குள் ஒருங்கிணைந்த திறைச்சேரி மேலான்மை தகவல் கட்டமைப்பின் ஊடாக நாட்டில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் நிதி செயல்பாடுகளை கண்காணிக்க முடியும் என்று சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.