மீன்பிடித்துறையில் மீனவர்களால் பிடிக்க தடை செய்யப்பட்ட சவுக்கு சுறா (கசமோறா )மீன்கள் 33 கிலோ கிராமை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கடற்படையினர் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தனது தவறை ஒப்புக்கொண்ட சந்தேக நபருக்கு திருகோணமலை பிரதான நீதவான் இஸ்மாயில் பயாஸ் றஸாக் 10,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
சாம்பல் தீவு,சல்லிய பிரதேசத்திலுள்ள மீன் வாடியில் வைத்தே மீன்களுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மீன் வள மற்றும் நீர்வள திணைக்கள திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் இஸார கண்காணம்கேவின் உத்தரவின் பேரில் அபிவிருத்தி உத்தியோஸ்தர் ஏ.சஜீவன் சந்தேக நபரை கைது செய்ய உதவி புரிந்தார்.