கடலாமையுடன் நால்வர் கைது

மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை  வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை திங்கட்கிழமை(31)​ கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பட்டாரக வாகனமொன்றை வழிமறித்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக வாகனத்தின் பின்புறம் சாக்கினால் கட்டப்பட்டிருந்த மூட்டைகளை சோதனையிட்டு 4 கடலாமைகளை  உயிருடன் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியை சேர்ந்த   இருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இளவாலை கீரிமலை கடற்பரப்பில் சட்டவிரதமாக பிடிக்கப்பட்ட ஆமைகளை குருநகர் பகுதிக்கு விற்பனைக்கு  கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.