கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள யால தேசிய பூங்கா

தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவும் பாதிக்கப்பட்டுள்ளதால்    வனவிலங்குகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக பவுஸர்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு சிறிய குளங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யால தேசிய பூங்கா ஊடாக பாயும் மாணிக்க கங்கையில் இருந்து நீர் எடுக்கப்பட்டு பவுஸர்கள்  மூலம் பூங்காவுக்கு கொண்டுச் செல்லப்பட்டு வன விலங்குகள் தண்ணீர்  அருந்தும்  இடங்களில் விடப்படுகிறது.

மேலும், பூங்காவிலுள்ள வறண்டு கிடக்கும் தொட்டிகளுக்கு சோலார் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர்  பாய்ச்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்னறனர்.