வெள்ளவத்தை காலி வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (13) பிற்பகல் கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.