கணவரின் மரணத்தின் பின்னர் எங்கள் வாழ்க்கை சிதைந்துவிட்டது!

2022 இல் கடும் பொருளாதார நெருக்கடியும்  அமைதியின்மையும் நிலவிய காலத்தில் ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான சமிந்த லக்சானின் மனைவி தனக்கு இதுவரை அரசாங்கத்திடமிருந்து  எந்த உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் எரிபொருள் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஏப்பிரல் 21ம் திகதி  பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சமிந்த லக்சான் கொல்லப்பட்டார்.

 

எனது கணவரின் மரணத்தின் பின்னர் எனது பிள்ளைகளின் வாழ்க்கை சிதைவடைந்துவிட்டது எனது மகன் பாடசாலைக்கு செல்வதில்லை  எனது மகளும் பாடசாலைக்கு செல்வதில்லை,என சமிந்த லக்சானின் மனைவி பிரியங்கணி தெரிவித்துள்ளார்.

எனக்கு நிரந்தர தொழில் எதுவுமில்லை, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவேளை ரணில்விக்கிரமசிங்க எனக்கு நீதி வழங்குவேன் என தெரிவித்தார்,ஆனால் தற்போது அவர் ஜனாதிபதியாக உள்ளபோதும் எந்த உதவியும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தநாட்களில் எங்களுக்கு உதவுவோம் என தெரிவித்தவர்களும் கைவிட்டுவிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளை பொலிஸாரின் இந்த நடவடிக்கையை இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்றன கண்டித்திருந்தன.