கணேவல்பொலவில் சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் வயிற்றில் குட்டி யானை!

கணேவல்பொல பலுகஸ்வெவ – பெல்லன்கடவல பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் பிரேத பரிசோதனையை அநுராதபுரம் பந்துலகம வனவிலங்கு அலுவலக கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டனர்.

கணேவல்பொல வனவிலங்கு  பாதுகாப்பு அலுவலகம் வழங்கிய தகவலையடுத்து, அநுராதபுரம் -பண்டுலகம வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவைச் சேர்ந்த கால்நடை வைத்தியர்களான சந்தன ஜயசிங்க மற்றும் உதேசிகா மதுவந்தி உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை (09) மாலை  அங்கு வந்து பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட  25 வயதான இந்த யானை கர்ப்பிணி நிலையையடைந்திருந்ததாக அவர்கள் கூறினர்.

பிரேத பரிசோதனையில் 7 அரை அடி உயரமுள்ள பெண் யானைக் குட்டி ஒன்று பிறக்கும் நிலையில் உயிரிழந்து அதன் வயிற்றுக்குள் காணப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.