கம்பஹாவிலுள்ள சிறுவர் இல்லத்திலிருந்து 3 சிறுமிகள் மாயம்

கம்பஹாவிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் வசித்து வந்த 16 வயதுடைய 3 சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் சிறுவர் இல்ல பாதுகாவலர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து தப்பிச்சென்ற சிறுமிகள் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தப்பிச்சென்ற சிறுமிகளை தேடும் பணியில் கம்பஹா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .