கர்ப்பப்பை குழாயில் கரு ; புலோலியை சேர்ந்த ஆசிரியை உயிரிழப்பு

கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

திடீர் வயிற்று வலியினால் துடித்த அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

உடற்கூற்று பரிசோதனையின் போது, கர்ப்பப்பை குழாயினுள், கரு தங்கியமையால் கர்ப்பப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.