காணாமற்போனோர் அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டி

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும் மற்றும் பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் 11(இ) பிரிவின் ஏற்பாட்டுக்கமைய குறித்த அலுவலகத்தின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் புரிதல் மற்றும் நிறைவேற்றுதல் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய  கொள்கைகளை உள்ளடக்கக்கூடியவையான விதிகளையும் வழிகாட்டு நெறிகளையும் வழங்குதல் வேண்டும்.

அதற்கமைய, சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் சிபாரிசுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வழிகாட்டுநெறி தயாரிக்கப்பட்டுள்ளதுடன், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த குறித்த வழிகாட்டுநெறிக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.