காலை உணவை உட்கொள்ளாமல் சென்ற பாண்ட் மாணவி ; மயங்கி விழுந்த பரிதாபம்

கிளிநொச்சி  ஸ்கந்தபுரம்  இலக்கம் 02 ஆ.தா.க  பாடசலைக்கு   ஜப்பானிய மக்களின்  நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய வகுப்பறைக்  கட்டிடத்தை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு வருகை தந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  மிசுசி கிடாக்கியை வரவேற்கும் நிகழ்விற்காக  காலை உணவு உட்கொள்ளாது வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்த  பாண்ட் அணி மாணவி தூதுவருக்கு முன்னால் மயங்கி வீழ்ந்து சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

 

கடும் வெயில் மற்றும் காலை உணவு உட்கொள்ளாத நிலையில்  பாண்ட் இசையுடன் ஜப்பானிய  தூதுவரை அழைத்துவருகின்ற போதே மாணவி மயங்கி வீழ்ந்துள்ளார்.

மயங்கி வீழ்ந்த மாணவியை உடனடியாக  ஆசிரியர்கள் குறித்த  இடத்திலிருந்து தூக்கிச் சென்றுவிட்டனர்.