கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது குறித்து கொரியா இணக்கம்!

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம்  தெரிவித்துள்ளனர்.

கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான  கலந்துரையாடல் புதன்கிழமை (09) சௌமியபவானில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம்  தெரிவித்துள்ளதோடு, இது உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு உதவியாகவும் , விவசாயிகளுக்கு சிறந்த விற்பனை விலையின் மூலமாக வருமானம் ஈட்டக் கூடியதாகவும் அமையும்.

மேலும்  மலையகத்திற்கு, இதன் ஊடாக விநியோகத்தை ஆரம்பிப்பது குறித்தும்  இதன் போது கலந்துரையாடப்பட்டது.