குச்சவெளியில் கல்மலையை உடைப்பதற்கு எதிர்ப்பு

குச்சவெளி பகுதியில் உள்ள கல்மலையை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (07) காலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மலையை உடைப்பதற்கு எதிரான வாசகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மகஜர் ஒன்றும் வழங்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.