குடிநீர் விநியோகத்தில் சிக்கல்

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குருணாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளுக்கு ஏற்றவிதத்தில் நீர் திறந்து விடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.