குடும்பம் ஒரு கதம்பம் நூல் அல்வாயில் வெளியிட்டு வைப்பு

ஈழத்து எழுத்தாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் எழுதிய குடும்பம் ஒரு கதம்பம் நூலின் வெளியீட்டுவிழா சனிக்கிழமை(12.08.2023) மாலை-04 மணியளவில் யாழ்.வடமராட்சி அல்வாயிலுள்ள கலை அகத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. தி.செல்வமனோகரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நூலாசிரியரான கோகிலா மகேந்திரன் உறவுகள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் கந்தர்மடம் அ.அஜந்தன் நூல் வெளியீட்டுரையை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து குடும்பம் ஒரு கதம்பம் நூலை நூலாசிரியர் கோகிலா மகேந்திரன் வெளியிட்டு வைக்க வடமாகாணக் கல்வித் திணைக்கள வடமராட்சி வலய உளவள ஆலோசகர் சி.கருணாகரன் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் ஆகியோர் நூல் தொடர்பான கருத்துரைகளை நிகழ்த்தினர்.