கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன. தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம்  வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த மீன் குஞ்சுகள்  சில  மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.