கொம்பனி வீதியில் கார் எரிந்து நாசம்

கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தளம் பகுதியில் தனியார் வாகனம் ஒன்று திங்கட்கிழமை  (31)  தீப்பற்றி எரிந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் ஓடிக்கொண்டிருந்த நவீன வாகனமொன்று  இவ்வாறு  தீப்பிடித்துள்ளதாகவும், தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தற்போது தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.