அளவீடு தரநிலை சேவைத் திணைக்களத்தின் பதுளை மாவட்ட பிரிவினரால் திங்கட்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தரமற்ற தராசுகளைப் பயன்படுத்தி பச்சை தேயிலை கொழுந்து திருடினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
பதுளை அட்டாம்பிட்டிய மற்றும் அதனை அண்மித்த சிறு தேயிலைத்தோட்டங்களில் இருந்து பச்சை கொழுந்து கொள்வனவு செய்வோரினால், தரமற்ற தராசுகளைப் பயன்படுத்தி கொழுந்து திருடப்பட்டுள்ளது.
இலங்கை தேயிலைச் சபையின் அங்கிகாரத்தை பெற்ற ஏழுவர் பயன்படுத்தும் தராசுகள் தர நிர்ணயம் செய்யப்பட்டன. அதில், மூவர் பயன்படுத்திய தராசுகளில் நிறை குறைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.