கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் – உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக்கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது,எனினும் வெளியான தகவல்களை பர்வையிட்டதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனது பாதுகாப்பு நலன்களில் தாக்கம் செலுத்தும் எந்த விடயத்தையும் உன்னிப்பாக அவதானித்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றது என்பதை  வலியுறுத்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.