சண்டிலிப்பாயில் உளவளத்துணைப் பயிற்சி நெறி

யாழ்.மாவட்டச் செயலகத்தின் நிதி உதவியுடன் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உளவளத்துணைப் பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை(14.08.2023) மேற்படி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த பயிற்சி நெறியில் 55 கிராமமட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். பயிற்சி நெறியின் வளவாளராக மாவட்ட உளவளத் துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி.சிந்துஜா அபிமன்யு கலந்து கொண்டார்.