சந்நிதியான் ஆச்சிரமத்தில் விசேட பஜனை நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையால் தொடர் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை (17.08.2023) காலை-10 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் வடபிராந்திய சாயி சமித்தி நிலைய அன்பர்களின் பஜனை நிகழ்வு இடம்பெற்றது.