தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் விசேட நிகழ்வுகள் வரிசையில் இன்று சனிக்கிழமை(19.08.2023) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சைவப்புலவர் க.கைலைநாதன் ‘ஞானக் குழந்தை’ எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.