சாவகச்சேரி மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரியின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரியின் வீட்டுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு  பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றுள்ளது.

கருகம்பனை பகுதியில் உள்ள அதிகாரியின் வீட்டுக்கு நேற்று திங்கட்கிழமை (08) மோட்டார் சைக்கிளில் சென்ற வன்முறை கும்பல், வீட்டின் கதவை கொத்தி உடைக்க முற்பட்டதுடன், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு, ஜன்னல் ஊடாக பெற்றோல் குண்டை வீட்டினுள் வீசி விட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.