சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலை அறிவித்து 13வது திருத்தத்திற்கான மக்கள் ஆணையை கோருங்கள்

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்களின் ஆணையை பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை அறிவித்துவிட்டு 13வது திருத்தத்தை  முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை மக்களிடம் கோருங்கள் என அவர்தெரிவித்துள்ளார்.

மக்கள் அதற்கான அதிகாரத்தை வழங்க தயார் என்றால் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தற்போது அதற்கான ஆணையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு இதற்கான ஆணையில்லை ,அவர்கள் தேர்தல் மூலம் இந்த பதவிகளை பெறவில்லை முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சிலர் மூலமே அவர்கள் இந்த ஆதரவை பெற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.