பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதால் இரு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
குறித்த மருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை நிராகரித்த காரணத்தினாலேயே மரணங்கள் சம்பவித்துள்ளன என்றார்.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் இருவர் உயிரிழந்த போது அந்த மருந்தினை தடை செய்ய முடிந்தது. தடைசெய்யப்பட்டமையால் அதற்கு அடுத்த மரணங்கள் பதிவாகாமல் தடுக்க முடிந்தது என்றார்.