சுற்றறிக்கையை மீளப்பெறுங்கள்தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கும்,  விமர்சிப்பதற்கும் சுகாதார சேவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான விதிமுறைகளுடான  தடை விதித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை மீள பெற வேண்டும் என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை உடனடியாக மீள பெறவில்லை எனில் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களையும்  ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சனிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கும் விமர்சிப்பதற்கும் சுகாதார சேவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான விதிமுறைகளுடான  தடை விதித்து.

சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நாம் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு தடைவிதித்தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சூழ்ச்சிகளை மறைப்பதற்கும்  அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையா? இது என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சுற்றறிக்கையானது குறித்து ஒரு சேவையை மாத்திரம் கட்டுப்படுத்துவது மாத்திரமின்றி சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

எனவே சுகாதார அமைச்சின் செயலாளர் இவற்றை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் நாம் சிவில் அமைப்புகள், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நாட்டு மக்களையும் ஒன்று சேர்த்து போராட்டத்தை முன்னெடுப்போம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.