சோசலிச இளைஞர் அமைப்பினர் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

சகோதரத்துவ நடைபயணத்தின் மீதான கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை சோசலிச இளைஞர் அமைப்பினர் முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றதுடன், ஆர்ப்பாட்டத்தை சோசலிச இளைஞர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த காலமாக வந்த அனைத்து அரசாங்கமும் இனவாதத்தைத் தூண்டி மக்களுக்குள் பிளவுகளை உண்டாக்கி ஆட்சியை முன்னெடுத்தனர். அத்தோடு மக்கள் மீது கடன்சுமைகளை சுமத்தி தம்மை பாரிய கஷ்டத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.

கறுப்பு ஜூலையையும் ஈஸ்டர் தாக்குதலையும் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த மற்றும் தற்பொழுது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் பின்னணியில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த அரசாங்கம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத நிலையில் அவர்கள் ஈஸ்டர் தாக்குதலை நடாத்தினார்கள். என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.